வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – TNA

Report
1Shares

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தீர்க்கமான ஓர் முடிவை எடுக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனம் குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில் விரிவாக கட்சி ஆராய்ந்து வருவதாகவும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

694 total views