பந்து இப்போது என் கையில், என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்

Report
2Shares

உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் இன்று எனக்குக் கிடைக்கும். 80 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்.

பந்து இப்போது எனது கைக்கு வந்து விட்டது. சரியான நேரத்தில் நான் ஆட்டத்தை இங்கிருந்து தொடங்குவேன்.

தேவையான ஏற்பாடுகள் தொடர்பாக, முடிவுகளை எடுப்பதற்காக தேர்தல் ஆணையம் வரும் 17ஆம் நாள் சந்திக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

615 total views