‘குய் ஜி குவாங்’ நாளை நாட்டை விட்டுப்போகிறது

Report
2Shares

சீன மக்கள் விடுதலை இராணுவ – கடற்படை கப்பல் ‘குய் ஜி குவாங்’ இலங்கைக்கான ஐந்து நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையை வந்தடைந்த இந்த கப்பல் நாளை (14) நாட்டை விட்டு புறப்பட்டுச்செல்லவுள்ளது.

இலங்கை கடற்படை கப்பல் ரங்களவில் நேற்று முன்தினம் சீன கடற்படை அதிகாரிகளுக்கான கலாச்சார நிகழ்வு இடம்பெற்றது.

இதனுடன் இணைந்ததாக நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் சீன அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

163.5 மீற்றர் நீளம் மற்றும் 22.2 மீற்றர் அகலம் கொண்ட இக்கப்பல் 10இ907 டன்கள் சுமந்து செல்லக்கூடியது. அத்துடன் இக்கப்பலில் 549 கடற்படை வீரர்கள் பயணிப்பதற்கான வசதிகளையும் கொண்டுள்ளது.

589 total views