அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் எடுத்துச்சென்ற மூன்று பேர் கைது

Report
1Shares

அனுமதி பத்திரமின்றி மதுபானம் எடுத்துச் சென்ற 3 நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லிந்துலை பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து 50 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ரெதெல்ல பகுதியிலிருந்து நுவரெலியா தலவாக்கலை வழியாக மட்டுக்கலை பகுதிக்கு குறித்த மதுபான போத்தல்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

558 total views