பிரசன்ன ரணவீர உட்பட 31 பேர் பிணையில் விடுதலை!

Report
2Shares

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, உட்பட 31 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 31 பேரும் இன்று (திங்கட்கிழமை) அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை நீண்டகாலம் குத்தகை அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

547 total views