இலங்கை கடற்படையினரால் சேதமாக்கப்பட்ட வலைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை!

Report
2Shares

இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக, சேதமடைந்துள்ள மீன்பிடிவலைகளுக்கு மாற்று வலைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என, தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் முகமாக, ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள மீனவர்கள்,

“தமிழகத்தின் கரையோரப் பிரதேசங்களில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கைது செய்து வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதனால் தான், இவர்கள் கைது செய்யப்படுவதாக, இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சுமார் 40 மீனவர்கள், இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை, தற்போது குறைவடைந்துள்ள நிலையில், மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறிருக்கையில், இலங்கை கடற்படையினரால் சேதமாக்கப்பட்ட வலைகளை, தமிழக அரசு மாற்று வலைகளாக தந்து உதவ வேண்டும்.” என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

531 total views