ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் அரச நிறுவனங்களை பாராட்டும் வைபவம் இன்று

Report
1Shares

அரச நிதி மோசடி மற்றும் ஊழல்கள் அற்ற வகையில் முறையான முகாமைத்துவத்தின் கீழ் செயற்பட்ட அரச நிறுவனங்களை பாராட்டும் வைபவம் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

831 அரச நிறுவனங்களின் 2015ம் ஆண்டு கணக்கு அறிக்கையை உள்ளடக்கிய கணக்கு மற்றும் பொது செயற்பாடு குறித்த பாராளுன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரச கணக்கு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் நிதி மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சருமான லசந்த அழகியவண்ண இது தொடர்பில் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்ற கட்டத் தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கையில்

கணக்காய்வு தொடர்பான இ அரச கணக்கு தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னெடுக்கும் அரசாங்கம்இ மாகாணம் மற்றும் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்கள் ஒன்றிணைத்தல் மற்றும் நிறுவனங்களை பாராட்டும் வேலைத் திட்டம் இன்று நடைபெறவிருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 831 அசர நிறுவனங்களின் வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படவுள்ளதாக மேலும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

530 total views