புதிய அரசியலமைப்பை எரித்து, நாசமாக்க வேண்டும்

Report
2Shares

அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முயற்சித்தால் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவது தடுத்து நிறுத்தப்படுவது மட்டுமல்லாது, அது எரித்து நாசமாக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணி உரிமை வழங்கப்பட்டால் திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட கடல் மற்றும் நில வளங்களை இலங்கை இழக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

473 total views