யாழில் கொட்­டும் மழை­யால் 9 ஆயி­ரம் பேர் பாதிப்பு

Report
2Shares

யாழ்ப்­பா­ண மாவட்­டத்­தில் தொட­ரும் அடை மழை­யால் 2 ஆயி­ரத்து 518 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 9 ஆயி­ரத்து 141 பேர் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர். 4 வீடு­கள் முழு­மை­யா­க­வும், 159 வீடு­கள் பகுதி அள­வி­லும் சேத­ம­டைந்­தன.

இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­ததா­வது-:மழை தொட­ரு­மாக இருந்­தால் தாழ் நிலப் பகுதி மக்­கள் இன்­னும் இடம்­பெ­யர வேண்­டிய நிலமை ஏற்­ப­டும்.

உடு­வில் பிர­தேச செய­லர் பிரி­வில் 106 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 385 பேரும், ஊர்­கா­வற்­று­றைப் பிர­தேச செய­லர் பிரி­வில் 40 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த137 பேரும், காரை­ந­கர் பிர­தேச செய­லர் பிரி­வில் 8 குடும்­பங் க­ளைச் சேர்ந்த 27 பேரும், யாழ்ப்­ பா­ணம் பிர­தேச செய­லர் பிரி­வில் 55 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 209 பேரு ம், நல்­லூர் பிர­தேச செய­லர் பிரி­வில் 146 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 552 பேரும், கோப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வில் 249 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 893 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சங்­கானை பிர­தேச செய­லர் பிரி­வில் 273 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 66 பேரும், சண்­டி­லிப்­பாய் பிர­தேச செய­லர் பிரி­வில் 128 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 444 பேரும், தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் பிரி­வில் 393 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 253 பேரும், சாவ­கச்­சேரி பிர­தேச செய­லர் பிரி­வில் 189 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 759 பேரும், பருத்­தித்­து­றைப் பிர­தேச செய­லர் பிரி­வில் 283 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த ஆயி­ரத்து 45 பேரும், மரு­தங்­கேணி பிர­தேச செய­லர் பிரி­வில் 643 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 2 ஆயி­ரத்து 382 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­ள­னர்- என்­றார்.

479 total views