கலால் அதிகாரி கேரள கஞ்சாவுடன் கைது

Report
1Shares

ஒருதொகை கேரள கஞ்சாவுடன் கலால் அதிகாரி ஒருவர் மட்டக்களப்பு - காத்தான்குடியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் வசம் இருந்து 775 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வவுனியா கலால் அலுவலகத்தில் பணியாற்றும் 25 வயதான ஒருவர் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

382 total views