சாய்ந்தமருது கடலில் நீராடிய மாணவன் மாயம்

Report
1Shares

சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இதன்போது, மற்றொரு மாணவன் காணாமல் போயுள்ளார்.

சாய்ந்தமருது - முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில் நேற்று சனிக்கிழமை மாலை ஆறு பாடசாலை மாணவர்கள், நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியுள்ளனர்.

இவர்களில், இருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, மூன்று மாணவர்கள் பாதிப்பு எதுவுமில்லாமல் கடலில் இருந்து வெளியேறி வந்துள்ளனர்.

எனினும், சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 16 வயதான மற்றொரு மாணவன் காணாமல் போயுள்ளார்.

இவரை தேடும் பணிகளை மீனவர்களின் உதவியுடன் குடும்பத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், பொலிஸிலும் இது குறித்து முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

376 total views