பெண்களை டுபாய்க்கு அனுப்பிய பிக்கு கைது!

Report
1Shares

புத்த சமயத்தைப் பரப்புவதற்காக பெண்களை டுபாய்க்கு அனுப்புவதாக நடித்து, வீட்டு வேலைக்கு அனுப்பி வந்த புத்த பிக்கு ஒருவர் உட்பட இரண்டு பேர் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளே இவ்விருவரையும் கைது செய்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், கொழும்பு விமான நிலையத்தில் பெண்கள் சிலர் வெள்ளை ஆடைகளுடன் விமானத்துக்காகக் காத்திருந்தனர்.

அவர்கள் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் எழவே, குறித்த பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள், தாம் டுபாய்க்கு வீட்டு வேலைகளுக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர். எனினும், அதற்கான எந்தவித ஆவணமும் அவர்களிடம் இருக்கவில்லை.

எனினும், அந்தப் பெண்கள் குழுவுடன் இருந்த பிக்கு ஒருவர், அப்பெண்கள் டுபாயில் புத்த சமயத்தைப் பரப்புவதற்காகச் செல்லவிருப்பதாகக் கூறினார்.

மேலதிக விசாரணைகளில், குறித்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் அந்த புத்த பிக்கு வழங்கியதாகவும், அவர்களுக்கு மாதச் சம்பளமாக 75 ஆயிரம் கிடைக்கும் என்று புத்த பிக்கு ஆசை காட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

பிக்குவிடம் நடத்திய விசாரணையில், அவர் இதுவரை நான்கு பெண்கள் குழுவினரை வீட்டு வேலைக்காக அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் உட்பட இரண்டு பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்தனர்.

337 total views