தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளீடு செய்ய கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்!

Report
1Shares

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற ஹற்றன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் நீக்கப்பட்டுள்ள தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளீடு செய்வதற்கு இந்திய பிரதமர் தலையீடு செய்ய வேண்டும் என மஸ்கெலியா லக்ஷபான தோட்ட தொழிலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு போராட்டமும் நடத்தப்பட்டது.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நீக்கப்பட்ட சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளிட வேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா லக்ஷபான தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இன்று சனிக்கிழமை (11.11.2017) காலை லக்ஷபான தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நூற்றுக்கு அதிகமானோர் கலந்து கொண்டதுடன், இலங்கை தொழிலாளர் காங்கரஸின் பிராந்திய பொறுப்பாளரான வெள்ளையன் தினேஷ் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கோஷங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டகாரர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

256 total views