2100 ஆசிரியர்கள் புதிதாக இணைக்கப்படுகிறார்கள், வர்த்தமானியும் வெளியாகியது

Report
11Shares

கல்விப் பொதுத் தராதர உயர்தர கல்வியின் புதிய தொழில்முறை பாடநெறிக்காக 2 ஆயிரத்து100 ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் குறித்த பாடநெறிக்காக நிலவும் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதற்காக போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு புள்ளிகளின் அடிப்படையிலேயே நேர்முகத் தேர்வினூடாக ஆட்சேர்ப்பு இடம்பெற இருக்கின்றது.

369 total views