எரிபொருள் நெருக்கடி குறித்த அறிக்கை செவ்வாய் ஜனாதிபதியிடம்!!

Report
3Shares

நாட்டில் கடந்த வாரம் நிலவிய எரிபொருள் நெருக்கடி நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு, குறித்த அறிக்கையைத் தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளித்தபின்னர், அது குறித்து அமைச்சரவை சந்திப்பின்போது கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

211 total views