யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குள் கைதிகளிடம் அலைபேசி

Report
6Shares

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சாலை சிறைக் கைதி ஒரு­வர் ஏனைய கைதி­க­ளுக்கு தொலைத் தொடர்பு சேவை­களை நடாத்தி வரு­வது தொடர்­பாக யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றின் கவ­னத்­துக்கு நேற்­றுக் கொண்டு வரப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யி­ னுள் உண­வுப் பொதி­யி­னுள் கஞ்­சாவை கொண்டு செல்ல முயன்ற வன்­னிப் பகு­தியை சேர்ந்த இளை­ஞன் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற கட்­ட­ளை­யின் பிர­கா­ரம் விளக்­க­ம­றி­யல் சா­லை­யில் உள்­ளார்.

அவரை பிணை­யில் விடு­விப்­பது தொடர்­பான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. சந்­தே­க­ந­பர் சார்­பில் தோன்­றிய சட்­டத்­த­ரணி பிர­தீ­பன், இளை­ஞ­ருக்கு யாழ்ப்­பா­ணம் சிறைச் சா­லை­யில் கைதி­யாக இருக்­கும் றஜிந்­தன் என்­ப­வரே அலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு தனது மனை­வி­யி­ட­மி­ருந்து உண­வுப் பொதியை பெற்று வந்து தரு­மாறு கேட்­டுக் கொண்­ட­தா­க­வும் அந்த உண­வுப் பொதி­யி­னுள் கஞ்சா இருப்­பது தெரி­யா­மல் கொண்டு வந்த போதே குறித்த இளை­ஞர் கைது செய்­யப்­பட்­டார் என­வும் தெரி­வித்­தார்.

அத்­து­டன் இவ்­வாறு இடம்­பெற்ற உரை­யா­டல்­கள் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அதனை நீதி­மன்­றின் பார்­வைக்கு சமர்ப்­பிக்க முடி­யு­மென­ வும் தெரி­வித்­தார்.சிறைச்­சா­லைக்­குள் அலைபே­சி­க­ளைப் பாவிப்­பது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும் யாழ்ப்­பாண சிறைச்சாலைக்­குள் பல கைதி­கள் அலைபே­சி­க­ளைப் பாவிப்­ப­தா­க­க் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இதேவேளை, அலைபேசியை கைதி­க­ளுக்கு விநி­யோகித்த சிங்­கள அதி­கா­ரி­யொ­ரு­வர் அண்­மை­யில் பணி நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார். வேறொரு உத்­தி­யோ­கத்­தர் தொடர்­பாக யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ள­மை­யும் குறிப்­பி­டத்­தக்­கது.

212 total views