விட்டுக்கொடுக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு – விஜயகலா பாராட்டு

Report
6Shares

வடக்கு – கிழக்கில் சுயாட்சி அடிப்­ப­டையி­லான கூட்­டாட்­சித் தீர்­வையே தமிழ் மக்­கள் எதிர்­பார்த்­துள்­ள­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் ­பா­னது விட்­டுக்­கொ­டுப்­பு­டன் தீர்­வைக் காண வேண்­டும் என்ற அக்­க­றை­யில் செயற்­ப­டு­வது பாராட்­டத்­தக்­க­தா­கும்.

இவ்­வாறு சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

அர­ச­மைப்பு நிர்­ண­ய­ச­பை­ யில் இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்­தில் உரை­யாற்­று­ம் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரசு இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அர­சி­யல் தீர்­வுக்கு முன்­னொ­ரு­ போ­தும் இல்­லாத சந்­தர்ப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு அரச தலை­வர் தேர்­த­லி­லும் பொதுத் தேர்­த­லி­லும் மக்­கள் எமக்கு ஆணை வழங்­கி­யுள்­ள­னர்.

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பில் மகிந்த அணி­யி­னர் பொய்­யு­ரை­க­ளைக் கூறி வரு­கின்­ற­னர். புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­யைக் குழப்­பு­வ­தற்கு தென்­னி­லங்­கை­யில் உள்ள இன­வாத சக்­தி­கள் முயன்று வரு­கின்­றன. பௌத்த மகா சங்­கத்­தி­ன­ரை­யும் குழப்பி வரு­கின்­ற­னர்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண்­ப­தற்­கான பல சந்­தர்­பங்­களை நாங்­கள் தவ­ற­விட்­டுள்­ளோம். ஒப்­பந்­தங்­கள் பல செய்­யப்­பட்­டுள்ள போதி­லும் அவை நடை­மு­றைப்­படு த்தப்­ப­ட­வில்லை. போருக்கு இது­தான் கார­ணம்.

தற்­போ­தைய அர­சி­யல் தீர்வு முயற்­சிக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் விட்­டுக் ­கொ­டுப்­புக்­களை மேற்­கொண்டு அர­சுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வரு­கின்­றார்.

வழங்­கப்­ப­டு­கின்ற அர­சி­யல் தீர்­வா­னது தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­க­ளைப் பூர்த்தி செய்­யக்­கூ­டி­ய­தாக அமைய வேண்­டும். இல்­லை­யேல் பெரும் அழி­வு­களை சந்­தித்த தமிழ் மக்­கள் அரை­கு­றைத் தீர்வு வழங்­கப்­ப­டு­மா­னால் அர­சின் மீது அதி­ருப்தி கொள்­ளும் நிலை ஏற்­ப­டும்.

மகிந்த அணி­யி­னர் அதி­கா­ரப் பகிர்­வின் ஊடாக அர­சி­யல் தீர்வு முயற்­சியை கடு­மை­யாக எதிர்த்து வரு­கின்­ற­னர்.

13ஆவது திருத்­தத்­தைத் தாண்டி தீர்­வைத் தரு­வேன் என்று இந்­தியா சென்று கூறிய முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான குழு­வி­னர் தற்­போது தீர்வு முயற்­சியை எதிர்ப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கும். தற்­போது கிடைத்­துள்ள நல்ல சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண்­ப­தற்கு சக­ல­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும்.

அர­சி­யல் சுய­ந­லன்­க­ளுக் ­காகத் தற்­போ­தைய சந்­தர்ப்­பத்தை எதிர்ப்­ப­தன் மூலம் நாட்டை மீண்­டும் குட்­டிச்­சு­வ­ராக்க எவ­ரும் முய­லக் ­கூ­டாது என்­றார்.

318 total views