முல்லைத்தீவு – கேப்பாபிலவு காணி விடுவிப்பு; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Report
3Shares

முல்லைத்தீவு – கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

தமிழ் மக்களுக்கு குறித்த தனியார் காணியை விடுவிக்க கோரி 254 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மக்களின் உரிமை மறுக்கப்பட்டு வருகின்றமை நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர், புனர்வாழ்வு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பபட்டுள்ளன.

151 total views