பட்ஜெட்டின் 2 ஆவது வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் ஆரம்பம்

Report
4Shares

நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று (10) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெற்று இறுதித் தினத்தன்று மாலை அதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

அடுத்து, 18 ஆம் திகதி முதல் டிசம்பர் 09 ஆம் திகதி வரையில் வரவு செலவுத் திட்ட குழு முறையிலான விவாதம் நடைபெறும். 9 ஆம் திகதி மாலையில் இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

70 total views