வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களை இணைத்­தால் குருதி ஆறு ஓடும்!

Report
21Shares

வடக்கு -– கிழக்கு இணைப்­புக்கு ஒரு­போ­தும் அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது. வடக்கு –- கிழக்கு இணைந்­தால், கிழக்­கில் குருதி ஆறு ஓடும் என்று புனர்­வாழ்வு இரா­ஜாங்க அமைச்­சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லா எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

அர­ச­மைப்­புச் சபை­யில் இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்­தில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும். போர் நிறை­வ­டைந்­தா­லும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வில்லை.

நாட்­டில் தற்­போது நடை­மு­றை­யில் உள்ள நிறை­வேற்ற அதி­கார அரச தலை­வர் முறைமை நீக்­கப்­பட்டு தலைமை அமைச்­சர் நிர்­வாக ஆட்­சி­மு­றைமை கொண்டு வரப்­ப­ட­வேண்­டும் என்று முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு உள்ள பாது­காப்பு நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­தான்.

அரச தலை­வர் வேட்­பா­ள­ரு­டன் நடை­பெற்ற பேச்­சுக்­கள் ஊடாக முஸ்­லிம் சமு­கத்­திற்கு விரோ­த­மான சக்­தி­களை நாம் தோற்­க­டித்­தி­ருக்­கின்­றோம் என்­பதை கண்­கூ­டாக காண்­டி­ருக்­கின்­றோம்.

தற்­போ­தைய நிலை­யில் அரச தலை­வ­ருக்கு வழங்­கப்­பட்ட நிறை­வேற்று அதி­கா­ரங்­கள் வெகு­வா­கக் குறை­கப்­பட்­டுள்­ளன.

இப்­போ­துள்ள அதி­கா­ரங்­க­ளு­டன் கூடிய அரச தலை­வர் ஆட்சி முறை­மையே தொடர்ந்­தும் இருக்­க­வேண்­டும் என்­பதே எமது நிலைப்­பா­டா­கும்.

வடக்கு – கிழக்கு பிரச்­சி­னை­யில் வடக்கு – கிழக்­கும் இணைந்­தி­ருக்க வேண்­டும் என்ற முன்­மொ­ழிவு காணப்­ப­டு­கின்­றது. வடக்­கும் – கிழக்­கும் இணைந்­தி­ருக்­கும் விட­யத்­தில் சில விட­யங்­களை கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும்.கிழக்கு மாகா­ணத்­தில் முஸ்­லிம்­கள் 42 சத­வீ­தம் வாழ்­கின்­றார்­கள். நாட்­டிலே கிழக்கு மாகா­ணத்­தில் மட்­டுமே முஸ்­லிம்­கள் அதி­க­மாக வாழ்ந்து வரு­கின்­றார்­கள்.

வடக்­கும் கிழக்­கும் இணைந்து இருந்­த­போது குருதி ஆறு ஓடி­யது. கிழக்கு மாகா­ணத்­தில் இருந்த மூவி­னங்­க­ளும் பிரிந்­தி­ருந்­தன.

கிழக்கு மாகா­ணம் தற்­போது அமை­தி­யாக இருக்­கின்­றது. கடந்த காலத்­தில் கிழக்கு மாகா­ணத்­தில் தமிழ் சகோ­த­ரர், முஸ்­லிம் சகோ­த­ரர் என்று மாறி­மாறி முத­ல­மைச்­ச­ராக இருந்­துள்­ளார்­கள்.

மூன்று இனக்­கு­ழு­வை­யும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டும் அமைச்­ச­ர­வை­யொன்று காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு மூன்று இனங்­க­ளும் ஒற்­று­மை­யாக அமை­தி­யாக சகோ­த­ரத்­து­வத்­து­டன் வாழும் மாகா­ணத்­தினை வடக்கு மாகா­ணத்­து­டன் இணைக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன?

ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன இர­வோடு இர­வாக வடக்­கி­னை­யும் கிழக்­கி­னை­யும் இணைத்­தார். நிர்­வா­க­முறை மாற்­றப்­பட்­ட­போது கிழக்கு மாகாண மக்­கள் சிறு­பான்­மை­யி­லும் சிறு­பான்­மை­யாக மாற்­றப்­பட்­ட­னர்.

கிழக்கு மாகா­ணத்­தில் உள்ள முஸ்­லிம் மக்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக்­கும் வடக்கு கிழக்கை இணைப்­ப­தற்கு எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் இட­ம­ளிக்க முடி­யாது. வடக்­கும் கிழக்­கும் தனித்தே இருக்க வேண்­டும்.

வடக்­கு­டன் கிழக்கு இணைந்­தி­ருந்­தாக வர­லா­றொன்று இல்லை. கிழக்­கு­டன் வட­மத்­திய மாகா­ணத்­தினை இணைத்து ஆட்சி நடத்­தி­ய­மைக்­கான வர­லாறு இருக்­கின்­றது. வடக்­கினை கிழக்­கு­டன் இணைக்க வேண்­டும் என்று கோரு­வ­தில் நியா­ய­மில்லை.

வட­கி­ழக்­கினை மீண்­டும் இணைத்து இனத்­தினை பாதித்து, இன­மொன்­றின் வீதா­சா­ரத்­தினை குறைத்து இரத்த ஆறு ஓடு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அவ்­வா­றா­ன­தொரு புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க முடி­யாது – என்­றார்.

1559 total views