உருவாகிறது புதிய புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு...?

Report
23Shares

தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது கனமழை பெய்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வெயில் தலைகாட்ட தொடங்கியது.

இந்நிலையில், அந்தமான் கடல்பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகி இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யலாம் என வானிலை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த புயல் சின்னமானது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பெய்த கனமழையால் மக்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி கடும் சிரமப்பட்டனர்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் பாதிப்புகள் சரிசெய்யாத நிலையில், மேலும் மழை வரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது!

1508 total views