புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

Report
4Shares

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட அரசியல் யாப்பு நிர்ணய சபையின் கமிட்டி நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் 5 ஆவது நாளாகவும் இன்று பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் ஆரம்பமானது. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விவாதத்தை ஆரம்பித்தார். நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால் அரசியல் யாப்பில் திருத்தத்தை ஏற்படுத்தும் உரிமை பொது மக்களுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த 70 வருடங்கள் மிகவும் கவலையான சூழ்நிலையில் முடிவடைந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சுகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கான எல்லையற்ற அதிகாரங்களை அகற்றுவதற்கு தான் உடன்படுவதாக தெரிவித்தார். நாடு பிளவுபட கூடாதெனவும் 13 வது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு இணங்க அதிகாரம் பகிரப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தனது விவாதத்தில் தெரிவித்தார்.

860 total views