பாடசாலைகளில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவும்-அமைச்சர் அகில

Report
3Shares

பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் பிரகாரம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் படி அனைத்து பாடசாலைகளையும் டெங்கு அற்ற பாடசாலைகளாக மாற்றும் நோக்கில் இரண்டு நாள் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பாடசாலைகளில் டெங்கு நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளது. 3 ஆம் தவணை பரீட்சைகள் நடைபெறுவதற்கு முன்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு திட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. முப்படைகள் , பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

803 total views