தற்போது உலகில் தொழில்நுட்பம் ஆட்சி புரிகின்றது – ஜனாதிபதி

Report
3Shares

ஒக்டோபர் புரட்சியானது போராட்டம் தொடர்பிலான மிகச்சிறந்த பாடத்தை புகட்டுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஒக்டோபர் புரட்சியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட வைபவத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ரஷ்யாவில் இடம்பெற்ற ஒக்டோபர் புரட்சிக்கு 100 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற வைபவத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவின் அப்போதைய புரட்சி தலைவரான லெனின் தலைமையில் இடம்பெற்ற ஒக்டோபர் புரட்சியானது முழு மனித இனத்திற்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகின்றது. தற்போது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராட மக்கள் தயாராகவிருந்த போதும அதற்கு தலைமை வகிக்க கூடிய தலைவர்கள் போதியளவில் இல்லையென ஜனாதிபதி இங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

‘அன்று முதல் இன்று வரை உலக நாடுகள் சுதந்திரம், ஜனநாயகம், நியாயம், போன்றவற்றிற்காக போராடுவதற்கான மார்க்கத்தை ரஷ்யாவில் ஏற்பட்ட ஒக்டோபர் புரட்சியே ஏற்படுத்திக்கொடுத்தது. சர்வதேசம் ஒரே பாதையில் சல்வதாலும் நடுநிலை கொள்கைகளுக்கு உலகில் வாய்ப்பு இல்லாததாலும் உலகில் பல்வேறு பிரச்சினைகளும் புரட்சிகளும் ஏற்பட வழி வகுத்துள்ளன. தற்போது உலகில் புரட்சிகள் தொடர்பில் குறைவாக பேசப்பட்டாலும் தொடர்ந்தும் புரட்சிகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. மக்கள் புரட்சிக்கு தயாராகவுள்ளனர். ஆனால் உலகில் இப்புரட்சிகளுக்கு தலைமை தாங்குவதற்கான தலைவர்கள் குறைவாகவே உள்ளனர். தற்போது உலகில் தொழில்நுட்பம் ஆட்சி புரிகின்றது. தற்போதுள்ள தொழில்நுட்ப ஸார்கள் மன்னர்கள் தோன்றியுள்ளனர. தற்போதுள்ள ஸார்கள் உலகத்திற்கு மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான பாடத்தை புகட்டி வருகின்றனர் என தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கை புத்திஜீவிகளின் கட்டுரைகள் அடங்கிய ஒக்டோபர் புரட்சி தொடர்கின்றது எனும் நூலும் ஜனாதிபதியினால் இங்கு வழங்கப்பட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சி தலைவர் ஆர் .சம்பந்தன், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ குணசேகர உள்ளிட்ட பலர் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

807 total views