கீதாவின் இடத்திற்கு பியசேன கமகே

Report
5Shares

கீதா குமாரசிங்க தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியாதென நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அவரது இடத்திற்கு முன்னாள் அமைச்சர் பியசேன பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கீதா குமாரசிங்க போட்டியிட்ட காலி மாவட்டத்தில் அவருக்கு அடுத்தபடியாக இருப்பவரை பரிந்துரைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிடம் கோரப்பட்டுள்ளது.இந்த பரிந்துரை இன்று நடைபெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்படும். நாளை முன்னாள் அமைச்சர் பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

810 total views