பாடசாலை மாணவியின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!

Report
84Shares

15 வயதான பாடசாலை மாணவியை கட்டி வைத்து விட்டு அவரின், கண் முன்னே இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று அவிசாவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அவிசாவளை – குடகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்று இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியும், தற்கொலை செய்துகொண்ட இளைஞரும் கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்த நிலையில், இதற்கு இளைஞரின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு குறித்த இளைஞர் தனது காதலியான மாணவியை சந்திப்பதற்கு அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மாணவியை யன்னல் கம்பியில் கட்டி வைத்து விட்டு, அவரின் கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

3490 total views