கொழும்பில் காதலனொருவர் செய்த செயல்: கடுமையாக எச்சரித்த நீதவான்

Report
12Shares

திருமணத்தை பிற்போட யோசனை முன்வைத்த காதலியை தாக்கிய காதலன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய செந்தில் குமார் என்ற நபருக்கே இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதியில் திருமணம் நடத்தபட இருந்த நிலையில் திருமணத்தை பிற்போட யோசனை முன்வைத்த நிலையில் காதலன் தன்னை தாக்கியதாக 20 வயதான காதலியொருவர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டில் காதலன் அடித்ததால் தனது முகம் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், காதலன் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றில் சந்தேகநபர் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் கடுமையாக எச்சரித்து, 50,000 ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளார்.

939 total views