எதிர்பார்ப்புக்களுடன் வெளிநாடு சென்ற பெண் சடலமாக வந்த சோகம்

Report
3Shares

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு தொழிலுக்காகச் சென்ற ஸ்ரீலங்காப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் நேற்று ஸ்ரீலங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பசறையைச் சேர்ந்த 36 வயதான பெண்ணே இதில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே உயிரிழந்ததாகவும், அவரது உடல் நேற்றுதான் ஸ்ரீலங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

998 total views