ஊடகவியலாளர் ஆர்ப்பாட்டக்காரராக செயற்பட்டதனாலேயே தாக்கப்பட்டார்- ராஜித

Report
1Shares

நாமும் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம், எமக்கு கைகூப்பி வணக்கம் செலுத்தியவர்களும் எம்மை அடித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி குறித்து பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

தான் வைத்தியராக கடமையாற்றும் போதே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது என்னைத் தாக்கிய பின்னர், வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நான் கூறவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனாலேயே என்னைத் தாக்கினர்.

ஹம்பாந்தோட்ட ஊடகவியலாளரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே தாக்கப்பட்டார். அவர் ஆர்ப்பாட்டக்காரராகவே கைது செய்யப்பட்டார். ஊடகவியலாளராக அல்ல எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

900 total views