வீரசுமணவின் விளையாட்டுதுறை அமைச்சு பறிபோனது

Report
2Shares

தென் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் வீரசுமண வீரசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தென்மாகாண சபையின் புதிய விளையாட்டுத் துறை அமைச்சராக, முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு சபையில் நிறைவேற்றப்பட்டபோது, வீரசிங்க அதற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

767 total views