கல்விக்கு விலை பேசிய அதிபர் கைது

Report
13Shares

மாத்தறை பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் இலஞ்ச ஊழல் மோசடித் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் 3ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக அதிபர் 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிபர் மாத்தறை நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

704 total views