கணவன் மனைவி பிரச்சினையின் உச்சக்கட்டம்!

advertisement

ருவான்வெல்ல – முரளி தோட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது மனைவியை தடியினால் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்பு தனது வீட்டு பக்கத்தில் உள்ள லயன் அறையில் துாக்கிட்டு தனது உயிரையும் மாய்த்து கொண்டுள்ளார்.

34 வயதுடைய தனது மனைவியை 35 வயதுடைய கணவரே இவ்வாறு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல நாட்களாக இவர்கள் இருவருக்கும் இடையில் நிலவி வரும் குடும்ப பிரச்சினையே சம்பவத்திற்கு காரணம் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.