மனைவிக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாத தந்தை!

Report
8Shares

நாவுல-ஹப்புகஸ்யாய பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தனது தந்தை தாயையும் மூத்த சகோதரனையும் அடித்து வெளியே தள்ளி விட்டு தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக சிறுமி நாவுல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் பின்பு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த தந்தையை கைது செய்து நாவுல நீதவான் முன் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

விசாரணைகளின் பின்பு சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவுல நீதவான் சுரங்க முரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்பு குறித்த சிறுமி சட்ட வைத்தியரிடம் பரிசோதணைக்கு அனுப்பப்பட்டு சிறுமி தொடர்பான அறிக்கை பெற்றதன் பின்பு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக நாவுல பொலிஸ் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.ஜீ.என். குமாரி மொரகொல்ல தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

821 total views