சில மாவட்டங்களில் இன்று மருத்துவர்கள் வேலைநிறுத்தம்.!

Report
1Shares

மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூரி தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சை­களை தீர்ப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் சில மாவட்­டங்­களில் பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பினை முன்­னெ­டுக்­கின்­றது.

இன்று முதல் எதிர்­வரும் 15ஆம் திகதி வரை மாவட்ட ரீதி­யாக ஒருநாள் அடை­யாள பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் சகல வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் அச்­சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் நவீந்த டி சொய்ஸா தெரி­வித்தார். தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, பொலன்­ன­றுவை, ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­க­ளி­லேயே பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

சைட்டம் பிரச்­சினை தொடர்பில் ஆராய்­வ­தற்­கென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்ட குழு இலங்கை மருத்­துவ சபையின் அதி­கா­ரங்­களை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது. மேலும் மருத்­துவக் கல்­வியின் தரம் தொடர்பில் ஆராய்­வ­தற்கு மருத்­துவ அங்­கீ­கார சபைக்கு அனு­ம­தி­ய­ளித்­தமை சைட்­டத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனு­ம­தி­ய­ளிப்­ப­தற்கு மேற்­கொண்ட செயற்­பா­டாகும். தற்­போது சைட்டம் மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூ­ரியை சட்ட ரீதி­யாக அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான அனைத்­து­மட்ட செயற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது.

தற்­போது அர­சாங்­கத்தில் இருக்கும் சிலர் சைட்­டத்­துக்கு ஆத­ர­வா­ன­வர்கள் என்­பது நேர­டி­யாக தெரிந்த விட­ய­மா­கி­யுள்­ளது. ஆனால் தனிப்­பட்ட நோக்­கத்­துக்­காக இவ்­வாறு பொது­மக்­களை பாதிப்­ப­டைய செய்­வது மிகவும் வேத­னைக்­கு­ரி­ய­தொன்­றாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் தற்­போது நிய­மிக்­கப்­பட்­டுள்ள வைத்­திய அங்­கீ­கார குழு­வுக்கு இலங்கை மருத்­துவ சபை­யி­லி­ருந்து ஒரு­வ­ரேனும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

அவ்­வா­றி­ருக்­கும்­போது மருத்­துவக் கல்­வியின் தரம் தொடர்பில் நிலை­யான தீர்வை எவ்­வாறு வழங்­கு­வார்கள் என்று தெரி­ய­வில்லை. இலங்கை மருத்­துவ சபையின் அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்கி அவர்­க­ளுக்கு தேவை­யா­னது போல் மருத்­துவக் கல்­வியின் தரத்தை தீர்­மா­னிப்­ப­தற்­கவே அவர்கள் தற்­போது குறித்த அறிக்­கையை சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றார்கள். பல வரு­டங்­க­ளாக சைட்டம் தொடர்பில் பல பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வந்­துள்ளோம். இந்­நி­லையில் இறு­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­ற­போது அவர் உறு­தி­யாக சைட்டம் தொடர்பில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்கு புதிய தீர்­வுகள் உள்­ள­டக்கி, விசேட அறிக்­கை­யொன்றை சமர்ப்­பிப்­ப­தாக அறி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் அவ்­வா­றான எந்த அறி­விப்­புக்­களும் விடுக்­கப்­ப­டா­துள்­ளமை அர­சாங்­கத்தின் பொறுப்­பற்ற செயற்­பாட்டை தெளி­வாக காட்­டு­கின்­றது.

அத்­தோடு தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள தேசிய இறை­வரி சட்­ட­மூ­லமும் வைத்­தி­யர்­களின் சுயா­தீன செயற்­பாட்டை கட்­டுப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளது. குறிப்­பாக இலா­ப­மீட்­டாத வைத்­தி­ய­சா­லை­களின் செயற்­பாட்டை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இச்­சட்­டமூலம் பெரிதும் உத­வு­கின்­றது. அது­மட்­டு­மல்­லாது வைத்­தி­யர்கள் பெற்­றுக்­கொள்ளும் சாதா­ரண வரு­மா­னத்­துக்கும் நீண்­ட­கால வரு­மான சேர்­வை­க­ளுக்கும் வரி அற­வி­டப்­ப­ட­வுள்­ளது. இது பார­தூ­ர­மான செயற்­பா­டாகும்.

ஆகவே இந்த செயற்­பாட்­டினை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். இதற்­கா­கவே நாளை (இன்று) தொடர்ச்­சி­யாக சைட்­டத்­திற்கு எதி­ராக எதிராக மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் எமது எதிர்ப்பினை முதற்கட்டமாக வெளிப்படுத்தவுள்ளோம். நாளைய தினத்தில் (இன்று) யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம். மேலும் குறித்த போராட்டத்தினை தொடர்ச்சியாக ஏனைய மாவட்டங்களிலும் விஸ்தரிக்கவுள்ளோம் என்றார்.

514 total views