கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு.

Report
10Shares
advertisement

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 63 நாட்களாக சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், 08ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களால் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடம் முற்றுகையிடப்பட்டது.

இதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டதுடன் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் இல்லையென கல்வி சாரா ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயற்பாடுகளுக்கு தலைமை தாங்கியதாக தெரிவிக்கும் 19 மாணவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வழக்கை இன்று விசாரணை செய்த பதில் நீதவான் மாணவர்கள் நிர்வாகக் கட்டடத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

995 total views