யாழ். கைதடியில் கல்வீச்சுத் தாக்குதல்: இருவர் காயம்

Report
13Shares

யாழ். கைதடி, மானிப்பாய் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கல்வீச்சுத் தாக்குதலில் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கல்வீச்சுத் தாக்குதலின்போது காயமுற்ற இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கல்வீச்சுத் தாக்குதலின் போது கைதடி மேற்குப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரொருவரும், 24 வயதுடைய இளைஞரொருவருமே காயமடைந்துள்ளனர்.

மேலும், குறித்த கல்வீச்சுத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

1040 total views