அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பது குறித்து தீர்மானிப்பேன்: சுசில்

Report
6Shares
advertisement

நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதா? இல்லையா என்பது குறித்து விரைவாக தீர்மானம் எடுக்கவுள்ளேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்ககையில்,

“நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதுடன், ஜனநாயகத்தை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நல்லாட்சி அரசாங்கத்துக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ளன.

அரச சொத்துக்களை விற்பனை செய்வது என்ற கொள்கையுடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அரச நிறுவனமொன்றை இலாபம் ஈட்டுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து விட்டு இறுதித் தீர்வாக அதனை குத்தகைக்கு கொடுப்பதை தீர்மானிக்கலாம்.

ஆனால், இந்த அரசாங்கம் எடுத்த எடுப்பிலேயே விற்பனை செய்யவே பார்க்கின்றது” என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

872 total views