யாழ்ப்பாணத்தின் கடலோர பாதுகாப்பு கடற்படையின் விசேட கமாண்டோக்களிடம்!

advertisement

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடலோரப் பாதுகாப்புக்கு கடற்படையின் சிறப்புக் கமாண்டோக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே கடலோரப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கென நிறுவப்பட்ட கடலோரக் காவற் படையினருக்கு உதவியாகவே ஸ்ரீலங்கா கடற்படையின் அதிவேக படகுகளைக் கொண்ட சிறப்புக் கொமாண்டோக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 21ஆம் திகதியன்று வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தியவர்களை தடுக்க முற்பட்ட கடலோரக் காவற்படையினரை மணல் கடத்தியவர்கள் தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார்.

இதனால், குறித்த பிரதேசத்திற்குச் சென்று ஆய்வுசெய்த ஸ்ரீலங்காவின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன கடலோரக் காவற்படையினருக்கு உதவியாக அதிவேக படகுகளைக் கொண்ட கடற்படையின் சிறப்புக் கொமாண்டோக்களை களத்திலிறக்க உத்தவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சியில் பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர், கடற்படை கொமாண்டோக்களின் உதவியுடன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

advertisement