யாழ்ப்பாணத்தை மிரட்டும் ஆவா குழு! மேலும் மூவர் கைது

advertisement

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாயைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஸ்டாலிங்டன், சுண்ணாகத்தினைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை பிரபாகரன் ஆகிய மூவரும் சுன்னாகம் பொலிஸாரால், நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இன்று அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இதேவேளை, ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருந்த ஆவா குழு சந்தேகநபர்கள் ஏழு பேரும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement