தொடரும் தமிழக மீனவர்களின் கைது : விசாரணைகள் ஆரம்பம்

Report
8Shares

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு மற்றும் காரைநகர் இலுப்பைக்கடவை கடற்பரப்பிற்கிடையில் கைதுசெய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர்களில் 8 நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதுடன், மீனவர்கள் பயணித்த 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை காரைநகர் இலுப்பைக்கடவை கடற்பரப்பிற்கிடையில் ஒரு படகில் சென்ற 4 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

எவ்வாறாயினும், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் யாழில் கைதுசெய்யப்பட்ட 49 தமிழக மீனவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் பயணித்த 12 படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 12 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

749 total views