குருகுலராஜா பதவி இழந்தமைக்கு ஸ்ரீதரனே காரணம்

Report
17Shares

வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சராக பதவி வகித்த த.குருகுலராஜா பதவி விலகியமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனே முழுமையான காரணம் என்று வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே வடமாகாண சபை உறுப்பினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சராக பதவி வகித்த தம்பிராஜா குருகுலராஜா மிகவும் நேர்மையான மனிதர் என்று பெருமிதம் வெளியிட்ட மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம்,

தற்போது அவர் இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டமைக்கு முக்கிய காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரனே என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் அமைச்சுப் பதவியைப் பெற்றால், தன்னைக்கொண்டு எவ்வித சட்டரீதியற்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது என்பது ஸ்ரீதரனுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

903 total views