ஒழுக்க கோவை இறுதி சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Report
3Shares

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒழுக்க கோவை இறுதி சட்டமூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவால் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

உள்நாட்டு ,வௌிநாட்டு நிபுணர்களின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் எதிர்வரும் தினத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் வௌ்ளிக்கிழமை தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக மொழி வகுப்புக்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதன்படி , சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தமிழ் மொழியும் , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக சிங்கள மொழியும் கற்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

509 total views