கண்டியில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை

Report
5Shares
advertisement

கணடி நகரில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கண்டி நகர ஆணையாளர் சந்தன தென்னகோன் இன்று தெரிவித்துள்ளார்.

வழமையாக கண்டி நகரப் பகுதியில் நாளொன்றுக்கு 120 தொன் குப்பைகள் சேரும் எனவும் நகர ஆணையாளர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கண்டி – தலதா மாளிகையின் எசல பெரஹர நிகழ்வு இடம்பெற்ற காலப்பகுதியினுள் கண்டி நகர எல்லைக்குள் சேர்ந்த குப்பையினை முந்தைய வருடத்துடன் ஒப்பிடும் போது குறைவடைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுவததாகவும் அவர் தெரிவித்தார்.

குப்பை கொட்டுதல் தொடர்பில் முன் அறிவிப்பு செய்யப்பட்டதால், இந்த குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

531 total views