யுத்த நிறைவே சம்பந்தனை சந்திக்க வைத்தது!! மார்பு தட்டும் மஹிந்த

Report
6Shares
advertisement

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினாலேயே தானும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில், மஹிந்தவும் சம்பந்தனும் ஒரே மேடையில் சங்கமித்திருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய போதே மஹிந்த மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

அத்தோடு, யுத்தம் நிறைவடைந்தமையே நல்லிணக்கத்திற்கும் அடித்தளமிட்டதென குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனைவருக்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த தனக்கு, சுதந்திரம் பறிபோய்விட்டதெனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

589 total views