அமைச்சர் ரவி கருணாநாயக்க பிடிவாதம்

advertisement

பதவி விலகுவதற்கு தான் தீர்மானிக்கவில்லை எனவும் இது குறித்து ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகவுள்ளதாக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்தன.இந்நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கூட்டு எதிர்க்கட்சியினரால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன், பதவி விலகுமாறும் பல்வேறு தரப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement