ரவியை ஜனாதிபதியே பதவி நீக்குவார்

advertisement

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக மறுத்தால் அவரை ஜனாதிபதியே பதவி நீக்குவார் என பொதுநிறுவனங்களின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ரவி கருணாநாயக்க விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் எடுப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் போது அமைச்சர்கள் பதவி விலகினால் சிறந்தது. தாம் எவ்வித குற்றமும் செய்யவில்லை எனில் விசாரணைகளின் பின்னர் பதவிக்கு திரும்ப முடியும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்ற காலத்தில் பதவியிலிருந்த மத்திய வங்கியின் ஆளுநரை ஜனாதிபதி பணி நீக்கம் செய்திருந்தார். எனவே எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி சரியான தீர்மானத்தை எடுப்பார்’ என கூறியுள்ளார்.

advertisement