பேரூந்தின் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்..!

Report
55Shares

கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனின் மரணச் சடங்கு அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று கதிர்காமத்தில் இடம்பெற்ற விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நா.நிதர்சன் எனும் 18 வயது இளைஞனும் 41 வயதான குடும்பஸ்தரும் உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையிலேயே இன்று குறித்த இளைஞனின் மரணச் சடங்கு இடம்பெற்றுள்ளதுடன் அவரின் உயிரிழப்பு அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 ஆம் இணைப்பு

கதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் உறங்கியுள்ளனர். இதனைக் கவனிக்காத, பேரூந்தின் சாரதி பேரூந்தை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பேரூந்தின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இரண்டு பேர் என தெரியவந்துள்ளது.

பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

948 total views