கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வடக்கில் 6000 பொருத்து வீடுகள்!

Report
19Shares

வடக்கு மாகாணத்தில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

வட.மாகாணத்திற்கு பொருத்து வீடுகளை வழங்க மீள்குடியேற்ற அமைச்சா் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை எடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட.பகுதிக்கு பொருத்தமில்லை எனத் தெரிவித்து அதனை எதிர்த்திருந்தது.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் வழக்குதாக்கல் செய்துள்ளதுடன், வடக்கு மாகாண சபையும் பொருத்து வீட்டினை எதிர்த்து வருகின்றது.

இந்நிலையில், வடக்கில் 6000 பொருத்து வீடுகளை வழங்க மத்திய மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசியல்வாதிகளின் தெரிவின் அடிப்படையில் மாவட்ட, பிரதேச செயலகங்களுடன் நேரடி தொடர்பு படாத வகையில் பொருத்து வீட்டினை நடைமுறைப்படுத்த அமைச்சர் சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

561 total views