எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதி: சிறிதரன்

Report
12Shares

வாள்வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம் எஞ்சியுள்ள முன்னாள் போராளிகளையும் அழிக்க அரசாங்கம் புதிய சதியினை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இன்று வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம் முற்றாக அவர்களை அழித்துவிடும் செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இங்கு யாரிடமும் ஆயுதம் இல்லை. இந்த நிலையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்க முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி மேற்படி கைதுகள் இடம்பெறுகின்றன” என சிறிதரன் தெரிவித்துள்ளார்.

441 total views