சுகாதாரத்துறையை தனியார் மயப்படுத்த எத்தனிக்கவில்லை: ராஜித

advertisement

சுகாதாரத்துறையை தனியாா் மயப்படுத்த நாம் எத்தனிக்கவில்லை. திறந்த பொருளாதார கொள்கைகளுக்கேற்ப ஏனைய உலக நாடுகளுடன் போட்டியிடவே தயார்ப்படுத்துகின்றோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நாம் செய்யும் நன்மைகளும் தீமைகளாகவே தெரிகின்றன. சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்யவேண்டிய அவசியம் எமக்குள்ளது.

கண்மூடித்தனமாக எல்லா அபிவிருத்திச் செயற்பாடுகளைக் குறைகூறுபவர்கள் நாம் செய்துள்ள மாற்றங்களை பற்றி சிந்திக்காமைக்கு நாம் எதுவும் செய்யமுடியாது” என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

advertisement